பாவனா கடத்தல் வழக்கில் சட்டம் சரியாக செயல்பட்டிருக்கிறது: கமல்ஹாசன்
சென்னை: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சட்டம் தனது கடமையை சரியாக செய்திருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வட இந்தியாவில் புகழ்பெற்ற இந்நிகழ்ச்சியை தமிழிலும் முயற்சித்துள்ளனர்.

அண்மையில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். தொடங்கிய நாள் முதலே இந்நிகழ்ச்சி குறித்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். அதில் பங்கேற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம் கொச்சையாக பேசுவது, உடன் இருப்பவர்களை அவமானப்படுத்துவது என தொடர்ந்து செய்து வருகிறார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சட்டமும், நீதியும் சரியாக செயல்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர் பக்கம் நான் உள்ளேன்.
மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு மார்க் போட மாட்டேன். ஓட்டு மட்டுமே போடுவேன். அனைத்துத் துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் இருக்கத்தான் செய்கிறது. ஜி.எஸ்.டி.வரியை நாங்கள் கோரியது போல் குறைக்க வில்லை. ஆனால் வரி குறைக்கப்பட்டிருக்கிறது. இதை நான் மனதார பாராட்டுகிறேன். குளிர்பானங்களுக்கு அளிக்கப்படும் மரியாதை சினிமாவிற்கு வழங்கப்படவில்லை என்பது வருத்தம் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications