Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாபநாசம் முக்கியமா.. கெளதமி முக்கியமா.. கமலிடம் கேட்டால் பிளான் "பி" க்குத்தான் முதல் ஓட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இன்று முக்கியமான நாள்...பாபநாசம் நாளைக்குதானே ரிலீஸ் என்றுதானே நினைக்கிறிறீர்கள்.. அதாங்க இல்லை, பாபநாசம் நாயகி கெளதமியின் பிறந்த நாளை இன்று பெஸ்ட்டாக கொண்டாடி வருகிறார் கமல்ஹாசன்.

கெளதமிக்கு இன்று 46வது பிறந்த நாள். கிட்டத்தட்ட கெளதமிக்கு பிறந்த நாள் பரிசு போல நாளை பாபநாசம் திரைக்கு வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கமலும், கெளதமியும் இணைந்து நடித்த படம் இது.

கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் நடுத்தர வர்க்க மக்கள் அனைவரிடமும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

திரிஷ்யம் என்கிற பாபநாசம்

திரிஷ்யம் என்கிற பாபநாசம்

திரிஷ்யம் என்ற மலையாளப் படத்தின் ரீமேக்தான் பாபநாசம். இப்போதுதான் இது தமிழுக்கு வருகிறது. ஏற்கனவே தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக்காகி விட்டது. இந்தியிலும் இதன் ரீமேக் அஜய் தேவ்கன், ஷிரியா சரணை வைத்து உருவாகியுள்ளது.

அப்பா கமல், அம்மா கெளதமி + 2 மகள்கள்

அப்பா கமல், அம்மா கெளதமி + 2 மகள்கள்

தமிழில் கமல்ஹாசன், கெளதமி ஜோடியாக நடித்துள்ளனர். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாக வருகிறார் கமல்.

ஸ்பெஷல் ஷோ

ஸ்பெஷல் ஷோ

இந்த நிலையில் படம் நாளைக்கு திரைக்கு வரவுள்ள நிலையில் இன்று விசேஷ காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதில் கமல் கலந்து கொள்ளவில்லை. மாறாக கெளதமிக்காக இன்றைய நாளை அவர் ஒதுக்கியுள்ளாராம்.

கெளதமி எனக்கு ஸ்பெஷல்

கெளதமி எனக்கு ஸ்பெஷல்

கமலுக்கு சிறப்பு ஷோவுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும், கெளதமியின் பிறந்த நாளை விட்டு விட்டு வர சுத்தமாக மனம் இல்லையாம். எனவே இன்று முழுவதும் கெளதமியுடன் செலவிடுகிறாராம் கமல்.

உற்சாகத்துடன்

உற்சாகத்துடன்

கமல்ஹாசனின் இந்த முடிவு கெளதமிக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம். எனவே இந்த பிறந்த நாளை அவர் பொக்கிஷமாக கருதுகிறாராம். அளவில்லாத சந்தோஷத்துடன் கமலுடன் இணைந்து தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் கெளதமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+