குணமடைந்தார் கமல்ஹாசன்.. இன்று காலை வீடு திரும்பினார்
சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார். கால் எலும்பு முறிவு காரணமாக கடந்த 3 வாரமாக அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் குணமடைந்துசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்து முடித்த சபாஷ் நாயுடு முதல் கட்ட படப் பிடிப்புக்கு பிறகு, சென்னை திருப்பினார் கமல். தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளை அவரது ஆழ்வார் பேட்டை அலுவலகத்தில் தன் குழுவினரோடு மேற்கொண்டு வந்தார்.

கடந்த ஜூலை 13ஆம் தேதி தன் அலுவலக மாடிப்படிகட்டில் இறங்கி வரும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார் கமல் . இதனை அடுத்து சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த கமல் இரண்டு நாட்களுக்கு முன் எழுந்து மெதுவாக நடக்க தொடங்கினார். இதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டார் கமல்ஹாசன். இந்நிலையில் 22 நாட்களுக்குப் பின்னர் இன்று காலையில் மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யபட்டார்.
காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள கமல் மூன்று அல்லது நான்கு வார ஓய்வுக்கு பிறகு தனது வழக்கமான பணிகளை செய்ய த் தொடங்குவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .
கமல் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்த அவரது ரசிகர்கள் தற்போது உற்சாகம் அடைத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications