பாஜக கூட்டணிக்கு ரஜினி பொருத்தமானவர்... கமல் பரபரப்பு பேட்டி
Recommended Video

சென்னை: டெல்லிக்கு தமிழகம் பற்றி எதுவும் தெரியாது என்றும், தனது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு தமிழகத்திற்கு 'அச்சேதின்' (நல்ல நாள்) உருவாகும் என நம்புவதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நியூஸ்18 ஆங்கில சேனலுக்கு கமல் அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளதாவது: தமிழகத்திற்கும், டெல்லிக்குமான இடைவெளி தொடர்ந்து இருந்து கொண்டேதான் உள்ளது.
தனித்தமிழ்நாடு கேட்ட அண்ணாதுரை, பின்னர் அக்கோரிக்கையை கைவிட்டபோதிலும், தனித்தமிழ்நாடுக்கான கோரிக்கைகள் அப்படியேத்தான் இன்னும் உள்ளது என்று தெரிவித்தார். நானும் அதையேத்தான் சொல்கிறேன்.

தனித்தமிழ்நாடு கோரிக்கைகள்
தனித்தமிழ்நாடு கோரிக்கைகள் அப்படியேத்தான் உள்ளது என்று கூறுவதால் இந்தியாவைவிட்டு தனியாக செல்ல வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. தமிழகத்திற்கு என்ன பிரச்சினை என்பது குறித்து டெல்லி பேச வேண்டும். உரையாடல்தான் அவசியம். இப்போதும் உரையாடல் உள்ளது. ஆனால் அது ஒற்றை வழி உரையாடல். கேட்டு தெரிந்துகொள்ளும் உரையாடல் கிடையாது.

டெல்லிக்கு தெரியாது
டெல்லிக்கு தமிழகம் பற்றி எதுவும் தெரியாது, அதைப்போலத்தான் தமிழகத்திற்கும் டெல்லி என்றால் அச்ச உணர்வு உள்ளது. நல்ல திட்டமாகவே இருந்தால் கூட டெல்லி கொண்டுவந்தாலே, அதை அச்சத்தோடு பார்க்கும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது. மக்களுக்கு உணவை கொடுங்கள், எதை சாப்பிட வேண்டும் என்ற மெனுவை கொடுக்காதீர்கள். இந்தியா போன்ற ஒரு நாட்டில், உணவு கிடைப்பதே கஷ்டமாக உள்ளபோது, மெனுவை நீட்டாதீர்கள். நானும் முன்பு மாட்டிறைச்சி சாப்பிட்டேன், இப்போது சாப்பிடுவதில்லை, அதெல்லாம் தனிப்பட்ட விஷயம்.

மோடி முயற்சி செய்கிறார்
பிரதமர் மோடி முயற்சிகளை எடுத்து வருகிறார். முயற்சிகளை செய்துதான் ஆக வேண்டும். ஆனாலும் தமிழகத்திற்கு 'அச்சே தின்' கிடைக்கவில்லை. கண்டிப்பாக நான் சொல்வேன், தமிழகத்திற்கு நல்ல நாள் பிறக்கவில்லை. நான் அரசியல் பிரவேசம் செய்த பிறகு 'அச்சே தின்' கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

பாஜக கூட்டணி
நான் ரஜினிகாந்த்திடம் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் உள்ளேன். நாங்கள் பாலச்சந்தரிடமிருந்து உருவாகி வந்தவர்கள். ரஜினிகாந்த் என்னுடைய நண்பர்தான். நான் ஏற்கனவே ரஜினிகாந்த்திடம் அரசியலுக்கு வருவது குறித்து தெரிவித்துவிட்டேன். எப்போது இந்த முடிவை எடுத்தீர்கள் என என்னிடம் அவர் கேட்டார். சில காலம் முன்பே எடுத்துவிட்டேன் என்று அவரிடம் தெரிவித்தேன். நான் எப்போது கட்சி தொடங்குவேன் என நேரம் குறிப்பிட முடியாது ஆனால் தொடங்குவேன். ரஜினியின் கொள்கை குறித்து நான் பேச முடியாது. ஆனால் அவரது ஆன்மீக நம்பிக்கை போன்றவற்றை வைத்து பார்த்தால் அவர் பாஜகவிற்கு கூட்டணியாக பொருத்தமானவர். ஆனால் நானோ நாத்தீகவாதி. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications