சிங்கப்பாதையில் செல்லும் கமல்.. விஸ்வரூபம் எடுப்பாரா ரஜினி?.. அரசியல் போட்டி ஆரம்பம்!
அரசியல் செயல்பாட்டில் ரஜினியை விட கமல்ஹாசன் வேகமாக இருக்கிறார்.
Recommended Video

சென்னை: ரஜினி, கமல் சினிமாவை இரண்டு தலைமுறைகளாக கட்டி ஆளும் ராட்சகர்கள். இவர்களுக்கு இருக்கும் புகழுக்கு காலம் முழுக்க வருடத்திற்கு ஒரு படம் என்று வாழ்க்கையை கழிக்கலாம். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இருவருமே அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.
ரஜினியின் வரவு பல வருடங்களாக எதிர்பார்த்த ஒன்று, கமலின் வரவு யாருமே எதிர்பார்க்காத ஒன்று. அடுத்த சட்டமன்ற தேர்தலின் வெப்பத்தை இப்போதே இவர்கள் கூட்டிவிட்டார்கள்.
ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு கமல் இப்போதே டாப் கியரில் செல்ல ஆரம்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினியைவிட அரசியலில் கமல் ரொம்பவே சுறுசுறுப்பாக இருக்கிறார்.

அதிக வேகம்
அரசியலில் ரஜினியிடம் இல்லாத வேகம் கமலிடம் அதிகமாகவே இருக்கிறது. கமலின் அரசியல் அறிவிப்பு ரஜினியின் அரசியல் அறிவிப்பு அளவிற்கு பெரிதாக வைரல் ஆகவில்லை. ஆனாலும் கமல் மற்ற விஷயங்களில் தன்னை லைம் லைட்டில் நிறுத்தி வைத்து இருக்கிறார். இதோ கட்சியின், பெயர், கொடி, மாநாடு என இப்போதே முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். ரஜினியிடம் அது மிஸ்ஸிங்.

டி.என். சேஷனுடன் மீட்டிங்
கமல் தன்னுடைய அரசியல் குருவை தேர்தெடுத்துவிட்டார் என்று கூட சொல்லாம். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷனுடன் கமல் சந்தித்ததுதான் இந்த வார வைரல். இப்போதே அவரிடம் கட்சி குறித்தும், அரசியல் குறித்தும் பேசி இருக்கிறார். வேகமாக செல்லும் கமலிடம் விவேகமும் இருக்கிறது.

மக்கள் நாடி
யாருமே எதிர்பார்க்காத 'வகையில்' ரஜினி குறித்து கமல் பேசினார். ரஜினியிடம் 'காவி' இருக்கிறது என்று குண்டை போட்டார். தமிழக மக்கள் எதை நினைத்து பயந்தார்களோ அதையே ஆயுதமாக பயன்படுத்தி ரஜினி குறித்து கருத்து சொன்னார். இதை கமல், ரஜினி என யாருடைய ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை.

யாரிடமும் ஒட்டாமல்
இவரது அரசியல் அறிவிப்பு பாஜக கட்சியினருக்குத்தான் அதிக பீதியை கொடுத்தது. அதன் காரணமாகவே கமல் பாஜக கட்சியிடம் இருந்து தள்ளியே இருக்கிறார். ரஜினி பாஜகவிடம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரோ அதே நெருக்கத்தை கமல் பாஜகவிடம் காட்டவில்லை. இந்த விதத்தில் இவர்கள் இருவருக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.

குரல்
ரஜினி அப்போதே பொது விஷயங்கள் குறித்து பேச கூடாது என்றார். ஆனால் கமல், ஆண்டாள் பிரச்சனை தொடங்கி தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை வரை அனைத்தையும் குறித்து கருத்து கூறி தன்னை அரசியலில் முன்னிறுத்த பார்க்கிறார். கமல் அதிகமாக கோல் அடிப்பது இங்கேதான்.

பயன்படுத்தினார்
அதேபோல் சோஷியல் மீடியாவை கமல் ரஜினியைவிட நன்றாகவே பயன்படுத்துகிறார். ரஜினி இணையதளம் அப்படியே இருக்கும் போது கமல் தினமும் டிவிட், நாளை நமதே வீடியோ என அடுத்ததடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டு இருக்கிறார். இவரின் சாதாரண டிவிட்களே செய்தி ஆகும் அளவிற்கு அரசியல் இருக்கிறது.

ஒப்புக் கொண்டார்
இதனாலேயே என்னவோ ரஜினி ''என்னுடைய பாதை வேறு, கமலின் பாதை வேறு'' என்று பேசியுள்ளார். ஆம் இருவரின் பாதையும் வேறு வேறுதான். ரஜினி இப்போதுதான் மீட்டர் கேஜில் ஏறி இருக்கிறார். கமல் புல்லட் ரயில் வேகத்தில் பறந்து கொண்டு இருக்கிறார். யார் முதலில் தங்கள் இலக்கிற்கு செல்கிறார்கள் என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications