விவாதத்தை துப்பாக்கியால் வெல்ல முனைவது மோசமான வழி: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ட்விட்டரில் கமல்

கவுரி லங்கேஷ் படுகொலைக்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: துப்பாக்கியை பயன்படுத்தி விவாதத்தில் வெல்ல முனைவது மோசமான வழி என மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கர்நாடகா மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Kamal Haasan on Gauri Lankesh Murder

முற்போக்கு சிந்தனையாளர்களை சுட்டுக் கொல்லும் வலதுசாரிகள் மீது நடவடிக்கை எடுகக் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அதில், விவாதத்தை துப்பாக்கியால் வெல்ல முனைவது மோசமான வழி என சாடியுள்ளார். மேலும் கவுரி லங்கேஷ் மறைவால் வாடுவோருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று இரவு, களம் இறங்கிவிட்டதை உணராத Tamil tweeters அனைவருக்ககும். இதுவும் களமே. பலகளம் பொருதும் மாமல்லரன்றோ நாம். Translation-We're versatile warriros எனவும் கமல்ஹாசன் பதிவிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+