சேலம்-சென்னை 8 வழிச்சாலையை வரவேற்ற ரஜினிகாந்த்துக்கு கமல்ஹாசன் பதிலடி!
Recommended Video

சென்னை: சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்தை வரவேற்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்த ரஜினிகாந்த், சேலம்-சென்னை 8 வழிச்சாலை போன்றவை வளர்ச்சிக்கு அவசியம் என்றும் விவசாயிகளை பாதிக்காமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் வரவேற்க தக்கது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளாரே இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்ற நிருபர்கள் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்து கூறுகையில்,
"மக்களுடன் முதலில் பேச வேண்டும். இதை மக்கள் கேட்டிருந்தார்களேயானால், எங்களுக்கு உடனே ஆவண செய்யுங்கள், இந்த 8 வழிச் சாலை இல்லாமல் எங்கள் வாழ்க்கை தடம் புரண்டுவிடும் என்று, யாராவது சொன்னார்களா?, அல்லது சேலத்திற்கு போவதற்கு, இது ஒரு வழியேதான் உள்ளதா? என்பதையும் யோசிக்க வேண்டும். வெவ்வேறு பாதைகள் இருக்கின்றன. அவைகளை இவற்றை விட குறைந்த செலவில், விரைந்து முடிக்கும் வழிகளும் இருக்கின்றன. பல அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லியுள்ளார்கள். அதையெல்லாம் கேட்காமல், இப்படித்தான், இதுதான் என மக்களை வற்புறுத்த முடியாது". இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications