விழாவுக்கு நேரமாகிவிட்டது.. உங்கள் அன்புக்கு நன்றி பரமக்குடியில் காரில் இருந்தபடியே பேசிய கமல்!
ராமநாதபுரத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடியில் திரண்டிருந்த மக்களிடையே பேசினார்.
Recommended Video

பரமக்குடி: ராமநாதபுரத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடியில் திரண்டிருந்த மக்களிடையே பேசினார். விழாவுக்கு நேரமாகிவிட்டதால் மேடைக்கு வரவில்லை என்ற அவர், காரில் இருந்தபடியே திரண்டிருந்த மக்களிடம் உங்கள் அன்புக்கு நன்றி என்றார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அப்துல் கலாம் வீட்டில் இருந்த தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், கலாமின் குடும்பத்தாரிடம் ஆசி பெற்றார்.
பின்னர் மீனவர்களை சந்தித்த அவர் அப்துல்கலாமின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி அதிரடி காட்டி வருகிறார்.

உங்கள் வீட்டு விளக்கு
இந்நிலையில் ராமநாதபுரத்தில் திரண்டடிருந்த மக்களிடையே நடிகர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள் இனிமேல் நான் சினிமா நட்சத்திரம் அல்ல உங்கள் வீட்டு விளக்கு என்றார்.

அலைமோதிய கூட்டம்
அந்த விளக்கை அணையாமல் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். மாலை மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

மேடைக்கு வரவில்லை
இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்றார். அப்போது விழாவுக்கு நேரமாகிவிட்டதால் மேடைக்கு வரவில்லை என்ற அவர், காரில் இருந்தபடியே திரண்டிருந்த மக்களிடம் உங்கள் அன்புக்கு நன்றி என்றார்.

பரமக்குடியில் பேசவில்லை
மேலும் மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்க மதுரை விமான நிலையம் செல்ல வேண்டும் என்பதால் அவர் பரமக்குடியில் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அள்ளிய கூட்டம்
1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். கமலின் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்து வரவேற்பு அளித்தனர். பரமக்குடி கமல்ஹாசனின் சொந்த ஊர் என்பதால் அங்கும் கூட்டம் அள்ளியது.
-
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications