"எலும்பு" ராஜா... எச். ராஜாவை வார்த்தைகளில் நொறுக்கிய கமல்!
சென்னை: முதுகெலும்பு இல்லாத கோழை கமல் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறிய கருத்துக்கு எலும்பு வல்லுநர் எச்.ராஜா என்று கமல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன், அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள காயத்ரி ரகுராம் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதால் கமலுக்கு கடுங்கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தமிழகத்தில் ஊழல் அனைத்து துறைகளிலும் மலிந்து கிடக்கிறது என்றார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, தைரியம் இருந்தால் கமல் அரசியலுக்கு வரட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் சவால் விட்டார்.

இலக்கிய வடிவில்...
கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியலுக்கு வருவது குறித்து டுவிட்டரில் நேற்று இரவு இலக்கிய வடிவில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது.

கோழை
கமல் ஒரு முதுகெலும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியுள்ளார். தான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

முதுகெலும்பு நிபுணர்
அதில் முதுகெலும்பு வல்லுநர் என்று எச்.ராஜாவை கடுமையாக கமல் விமர்சித்துள்ளார். மேலும் துணிவுள்ள சினிமாக்காரர்கள் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.

குரல் கொடுக்க வேண்டும்
ஊழல் குறித்து இணையதளத்தில் மக்களே குரல் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்பவர்களை கைது செய்யும் அளவுக்கு தென்னகத்தில் சிறைகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications