அரசியல் களத்தை தெறிக்கவிட்ட கமல் டிவிட்டர் கருத்துக்கள் இவைதான்!
Recommended Video

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது டிவிட்டுகள் பலவும் கூட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவைதான்.
பிற முன்னணி நடிகர்களைவிட மெல்லதான் கமல் டிவிட்டருக்கு வந்தபோதிலும், இப்போது பரபரப்பை ஏற்படுத்துவது என்னவோ அவரது டிவிட்டுகள்தான்.
நெட்டிசன்கள் கூறும் கருதுக்களை அவர் தொடர்ந்து கவனித்தும் வருகிறார்.
அரசியல் வட்டாரத்தில் கமல் பரபரப்பை ஏற்படுத்திய சில டிவிட்டுகளை இங்கே பாருங்கள்:
|
ஜல்லிக்கட்டு ஆதரவு
ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்.
|
உரிய மரியாதை
கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்து பின்னர் திரும்பிய எம்எல்ஏக்களுக்கு தொகுதி மக்கள் அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று டிவிட்டியிருந்தார் கமல்.
|
குற்றங்கள்
ஊழல் மற்றும் விபத்துக்காக ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டால், தமிழகத்தில் எந்த கட்சியும் ஏன் அப்படி ராஜினாமா கோரவில்லை. போதிய அளவுக்கு குற்றங்கள் இழைக்கப்பட்டாகிவிட்டது.

களமிறங்கிவிட்டேன்
களம் இறங்கிவிட்டதை உணராத Tamil tweeters அனைவருக்கும். இதுவும் களமே. பலகளம் பொருதும் மாமல்லரன்றோ நாம். Translation-We're versatile warriros
|
குல்லா போட்டுவிட்டார்கள்
காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.
|
வாரும், வெல்வோம்
சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்.
|
வளர்மதி
"வளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்". இது வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது குறித்து கமல் வெளியிட்ட டிவிட்டாகும்.
|
குதிரை பேரம்
நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்
|
உம்மை கவனிப்போம்
பள்ளிப் படிப்பை முடிக்காதவன் " நீட்" ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம். இவ்வாறு தனது டிவிட்டுகளில் காரம் காட்டி வருகிறார் கமல்.












Click it and Unblock the Notifications