என்னை போன்றோர் அரசியலுக்கு வர வேண்டும் என விஜயகாந்த் வாழ்த்து... கமல் ஹேப்பி
Recommended Video

சென்னை: அரசியலில் சீனியர் என்பதால் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன் என்று கமல் தெரிவித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் கமல் சந்தித்தார். ரஜினியை சந்தித்தபோது கமல் கூறுகையில் அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்னர் எனக்கு பிடித்தவர்களிடம் சென்று சொல்லிவிட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து கமல் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஜயகாந்தை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன்.

திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெறுவேன். எனது அரசியல் பயணத்திற்கு அரசியலில் மூத்தவரான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன். சகோதரர் விஜயகாந்தை சந்தித்து நீண்ட நாட்கள் ஆவதால் நேரில் சந்திக்க வந்தேன். நீங்களெல்லாம் அரசியலுக்கு வர வேண்டும் என என்னை வாழ்த்தினார் என்றார் அவர்.
கமல், ரஜினி அரசியல் குறித்து விஜயகாந்திடம் ஏற்கெனவே கருத்து கேட்டபோது சினிமாவில் அவர்கள் இருவரும் எனக்கு சீனியராக இருக்கிறார்கள். ஆனால் அரசியலில் இருவரும் எனக்கு ஜூனியர்தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications