நான் கலைஞன்... அவர்தான் தலைவர்!- கருணாநிதியை கவுரவித்த கமல்!
கமல் ஹாஸன் பேச்சைக் கேட்டு, 'லைட்டா குழப்புறாரு' என சிலர் கமெண்ட் அடிப்பதுண்டு. ஆனால் கூர்ந்து கேட்டால், அதில் பல அர்த்தங்கள் இருக்கும். இதை அவர் முன்தயாரிப்பின்றி சரளமாகப் பேசுவார். எல்லாருக்கும் அது கைவராத கலை.
கருணாநிதி தலைமையில் சமீபத்தில் நடந்த வைரமுத்துவின் சிறுகதை வெளியீட்டு விழாவில் கமலின் பேச்சு அப்படித்தான் அமைந்தது.
இந்த விழாவுக்கு கமலின் ரசிகர்கள் நிறையப் பேர் வந்திருந்தார்கள். அவர்கள் கமலைப் பார்த்ததும் விசில் அடித்து முழக்கமிட்டனர். சிலர் கோரஸாக ‘தலைவா' என்று குரல் எழுப்பினார்கள்.

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த கமல் மைக் பிடித்ததுமே கரவொலி...
‘‘நான் வரும்போது நீங்கள் அழைத்த ‘தலைவா' வார்த்தை (கருணாநிதியைக் காட்டி) அவருக்குத்தான் சொந்தம். நான் கலைஞன் மட்டுமே!" என்றார். கைதட்டல் அடங்க நெடுநேரம் ஆனது.
‘‘பாலகனாக நான் நடிக்க வந்தபோது, நடித்துக் காண்பிக்கச் சொன்னார்கள். அவரின் (கருணாநிதி) வசனத்தைச் சொல்லித்தான் நடிகன் ஆனேன். இன்று அவரோடு மேடையைப் பகிர்ந்துகொண்டு இருப்பது என்னுடைய பாக்கியம்.!
இதில் 40 சிறுகதைகள் இருப்பதாக வைரமுத்து சொன்னார். முன்னுரையைப் படித்தேன். அதுவே ஒரு சிறுகதைதான். இவை ஊரார் பேசும் வம்புக் கதைகள் அல்ல.... சில நேரங்களில் கோபப்படவும், கண்கலங்கவும், பொறாமைப்படவும் வைக்கின்றன. எனக்கே கதை எழுதவேண்டும் என்ற ஆசையை தூண்டிவிட்டன இந்தக் கதைகள். நானும் கவிதைகள் எழுதி இருக்கிறேன். அதை வைரமுத்துவிடம்தான் காட்டுவேன். நன்றாக இருக்கிறது என்று அவரும் சொல்வார். அவர் நல்ல கவிஞரா? நல்ல நடிகரா என்று தெரியவில்லை?"
-கைத்தட்டல் பறந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications