கையில் உள்ள படங்களை முடித்து விட்டு முழு நேர அரசியலில் குதிக்கிறார் கமல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்துக்கள் கூறுவதோடு நின்று விடுவார் என்று சிலர் பேசி வந்தாலும் கூட அவர் நிச்சயம் முழு நேர அரசியலுக்கு வருவார் என்று கமல்ஹாசன் நற்பணி மன்ற வட்டாரத் தகவல்கள் அடித்துக் கூறுகின்றன. கையில் உள்ள கமிட்மெண்ட்களை முடித்து விட்டு கமல் அரசியலுக்கு வருவார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடம் நிலவுகிறது. ஜெயலலிதா இல்லை, கருணாநிதியும் ஆக்டிவாக இல்லை. மற்ற தலைவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டது போலவும் தெரியவில்லை.

இந்த இடைவெளியில்தான் சமீபத்தில் இரு பெரும் புயல்கள் தமிழகத்தை உலுக்கிப் போட்டுள்ளன. ஒன்று ரஜினி, இன்னொன்று கமல். இதில் ரஜினி நேரடி அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது. அதேசமயம், கமல்ஹாசன் வழக்கம் போல நேரடியாக இன்னும் அரசியல் பிரவேசம் குறித்து சொல்லவில்லை. நான் வந்து ரொம்ப நாளாச்சு என்று மட்டுமே அவர் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வருவார்

அரசியலுக்கு வருவார்

ரஜினி தரப்பில் அரசியல் தொடர்பான ஆலோசனைகள், யோசனைகள், பிளானிங் என எல்லாமே ஜரூராக நடக்கிறது. கமல் தரப்பில் அப்படி எதுவும் இல்லை. அதேசதமயம், அவர் மனதுக்குள் ஏற்கனவே திட்டங்கள் போட்டாகி விட்டது என்கிறார்கள் நற்பணி மன்றத்து ஆட்கள். அவர்கள் கமல்ஹாசன், நேரடி அரசியலுக்கு விரைவில் வருவார் என்கிறார்கள்.

விட மாட்டார்

விட மாட்டார்

கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ம் தேதி. வருடா வருடம் அந்த, தினத்தை நற்பணித் திட்டங்களை தொடங்கி வைக்கும் நாளாக கொண்டாடி வருகிறார். இந்த வருடம் அவருக்கு கடும் சவால் நிறைந்த பிறந்த நாளாக மாறியுள்ளது.

இந்த வருடம் அரசியல் பிரவேசம்

இந்த வருடம் அரசியல் பிரவேசம்

இந்த வருடமும் வழக்கம் போல ரசிகர்களை சந்திப்பார். இந்த முறை அது விசேஷமாக இருக்க வாய்ப்புள்ளது. காரணம், அவரிடமிருந்து முக்கிய தகவல்களை, அறிவிப்புகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறோம் என்று ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

படங்களை முடித்து விட்டு

படங்களை முடித்து விட்டு

தற்போது கமல்ஹாசன் கையில் இரு படங்கள் உள்ளன. மேலும் பிக் பாஸ் ஷோவிலும் ஈடுபட்டுள்ளார். இதையெல்லாம் முடித்த பிறகுதான் அவர் ஃப்ரீயாக முடியும். எனவே பிறந்த நாளில் அறிவிப்பை வெளியிட்டு விட்டு முழு நேர அரசியலுக்கு அவர் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்.. இது அவள் ஒரு தொடர் கதை படத்தில் வரும் ஒரு பாடல் வரி. கமலுக்கும் கூட பொருந்தும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+