மனோரமாவின் உடலுக்கு கமல், தனுஷ் நேரில் அஞ்சலி
சென்னை: நடிகை மனோரமாவின் உடலுக்கு நடிகர் கமல், தனுஷ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புரிந்த நடிகை மனோரமா, உடல் நலக் குறைபாடு காரணமாக நேற்று காலமானார்.

அவரது உடல் தி.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மனோரமாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் கமல் மனோரமாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். உன்னால் முடியும் தம்பி, அபூர்வ சகோதர்கள் உட்பட பல்வேறு படங்களில் மனோரமாவுடன் கமல் இணைந்து நடித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற விழா ஒன்றில் கூட கமலும், மனோரமாவும் ஒன்றாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், நடிகர் தனுஷும், தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் மனோரமாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சரத்குமார், ராதிகா, விஷால்:
மனோரமாவின் மறைவு செய்தி கேள்விப்பட்டு விரைந்து வந்த நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ராதிகா ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இரவு முதல் சரத்குமார், விஜயகுமார் உள்ளிட்டோர் மனோரமாவின் உடலுக்கு அருகிலேயே இருந்து இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டனர்.
இதேபோல் விஷால், கார்த்தி போன்றோரும் மனோரமாவின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி, விஷால் அணி என இருவேறு அணியாக களமிறங்கி, ஒருவரையொருவர் தாக்கி சொற்போர் நடத்தி வந்தபோதும், மனோரமாவின் இறுதி அஞ்சலியில் இருதரப்பும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications