அதிமுக, திமுகவிற்கு அதிகம் சவாலாக இருக்கும் நடிகர் கமல் - நியூஸ் 7 டிவி சர்வே
அதிமுக, திமுகவிற்கு அதிகம் சவாலாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன்தான் என்று நியூஸ் 7 டிவி - குமுதம் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: அதிமுக, திமுகவிற்கு அதிகம் சவாலாக இருக்கப் போகும் நடிகர் கமல்ஹாசன்தான் என்று தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் கருத்துக்கூறியுள்ளனர்.
நியூஸ் 7 தொலைக்காட்சி நடத்திய மக்கள் மனசுல யாரு என்ற கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
ரஜினி, கமல், விஜய் மூவரில் திரையுலகிலிருந்து அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
புள்ளியியல் வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலின்படி வயது, பாலினம், மதம், கல்வித்தகுதி மற்றும் தொழில் அல்லது பணி அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டது.

நடிகர் அரசியலுக்கு வர வாய்ப்பு
சினிமாவில் இருந்து இன்னொரு முதல்வர் வருவாரா என்ற கேள்விக்கு ஆம் என்று 31.6% பேரும் இல்லை என்று 20.2% பேரும் உறுதியாக கூற முடியாது என்று 27.8% பேரும் வேண்டவே வேண்டாம் என்று 20.4% பேரும் கருத்து கூறியுள்ளனர்.

கமலுக்கு முதலிடம்
கமல் கட்சி ஆரம்பித்தால் திமுகவிற்கு அதிகம் சவாலாக இருப்பார் என மக்கள் கருத்து கூறியுள்ளனர். திமுகவிற்கு அதிகம் சவாலாக இருக்கப்போகும் நடிகர் யார் என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்:
கமல் - 35.5%
ரஜினி - 22.8%
விஜய் - 16.5%
மற்றவர்கள் 25.2% என மக்கள் கருத்து கூறியுள்ளனர்.

கமல் அதிகம் சவால்
அதிமுகவிற்கு அதிகம் சவாலாக இருக்கப் போகும் நடிகர் யார் என்ற கேள்விக்கு மக்கள் கூறிய கருத்து:
கமல் - 45.3%
ரஜினி - 18.2%
விஜய் - 14.5%
மற்றவர்கள் - 22%
அதிமுகவிற்கு கமல்தான் அதிகம் சவாலாக இருப்பார் என 45.3 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.

கமலுக்கு பெண்கள் ஆதரவு
கருணாநிதி, ஜெயலலிதாவிற்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது தெளிவாகவே தெரியவருகிறது. அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி, கமல் வெளிப்படையாகவே அறிவித்து விட்டனர். விஜய் இன்னமும் கூறவில்லை. மூவரையும் வைத்து எடுக்கப்பட்ட சர்வேயில் கமல்தான் முந்தியிருக்கிறார். முக்கியமாக பெண்களின் ஆதரவு கமலுக்கு அதிகம் உள்ளது சர்வேயில் தெரியவந்துள்ளது.
-
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
“இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே”! விஜய்யின் பயிர்க்கடன் ரத்து.. விவசாயிகள் அப்செட் -
விவசாய கடன் தள்ளுபடி.. டெல்டாவில் விஜய்க்கு பெருகும் எதிர்ப்பு! போராட்டத்தில் குதித்த விவசாயிகள் -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்!












Click it and Unblock the Notifications