சாந்துப் பொட்டு.. சந்தனப் பொட்டு.. மறக்க முடியாத கமல் - கெளதமி
கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த அத்தனை படங்களிலும் நடிகை கெளதமி நடிப்பில் அசத்தியிருப்பார். குறிப்பாக தேவர் மகன் படம் அவரது நடிப்புக்கு மிக முக்கியமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: கமல்ஹாசனின் பெஸ்ட் ஜோடி என்று ஒரு லிஸ்ட் போட்டால் கெளதமிக்கு அதில் முக்கிய இடம் உண்டு. இன்னும் சற்று மேலே சொல்லப் போனால் ஸ்ரீதேவிக்கு அடுத்த பெஸ்ட் ஜோடி கெளதமி என்று சொல்லலாம். காரணம், இவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி அப்படி அழகாக இருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து அறிமுகமாகியவர் என்றாலும் கூட கமல்ஹாசனுடன் சட்டென செட்டானவர் கெளதமி. இடையில் ராமராஜனுடன் ஜோடி போட்டும் கலக்கியவர் கெளதமி.

தேவர் மகன் - கமல், கெளதமியின் நடிப்பில் வெளியான பெஸ்ட் படம். சாந்துப் பொட்டு சந்தனப் பொட்டு பாடலில் இவர்களுக்கு இடையே இழையோடிய காதல் ஒரு கவிதை. கமல்ஹாசன் தேவர் மகனாக மாறிய பிறகு ஊருக்கு வந்து சேரும் கெளதமி, கமலிடம் இழைவதும், அவர் விலகுவதும், நிஜம் புரிந்து கெளதமி வெகுண்டு எழுவதும், விரக்தியில் அழுவதும், கடைசியாக முத்தமிட்டு பிரிவதும்.. ஒரு காவியம்.
இந்த ஜோடியின் முக்கியப் படம் நம்மவர். இருவருக்கும் இடைியலான காதல் செம காமெடியாக இருக்கும். கலாய்ப்புகள் நிறைந்த அந்தக் காதலை கமலும் சரி, கெளதமியும் சரி ரகளையாக செய்திருப்பார்கள்.
குருதிப் புனல் இன்னொரு பரிமாணமாக அமைந்தது இருவருக்கும். இவர்களது ஜோடியில் அமைந்த படங்களில் குருதிப்புனலுக்கும் முக்கிய இடம் உண்டு.
கடைசியாக இருவரும் இணைந்து நடித்த பாபநாசம் கெளதமி குறித்த விமர்சனங்களை எழுப்பினாலும் கூட அவரை புதிய கோணத்தில் பார்க்க உதவியது. ரசிகர்களிடையே கெளதமிக்கு பெரிய வரவேற்பில்லை என்ற போதிலும் மோசமாக செய்யவில்லை என்ற அளவில்தான் நடித்திருந்தார் கெளதமி.
கமலுடைய படங்களில் ஜோடியாக நடித்த கெளதமி பின்னர் அவரது காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றினார். சரிகா என்ற ஆலமரம் கமல்ஹாசனை விட்டுப் பிரிந்தபோது, அவரைத் தாங்கியவர் கெளதமி. இந்தக் காதல் பின்னர் இணைந்து வாழும் முடிவுக்கு இருவரையும் இட்டுச் சென்றது..!
நிழலிலும் சரி, நிஜத்திலும் சரி கமல்ஹாசனின் சூப்பர் ஜோடிகளில் கெளதமிக்கு நிச்சயம் முக்கிய இடம் உண்டு!
"சக்தி" மட்டும் இல்லை.. கமல்ஹாசனின் ரசிகர்களுக்கும் கூட கெளதமியின் முடிவு வருனுடன்த்தமாகவே இருக்கும்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications