அரசியல் எதுக்கு... தம்பி விஜய் நல்ல படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தலாம்!- சொல்கிறார் கமல்
Recommended Video

சென்னை: இந்தி நடிகர் ஆமிர்கான் மாதிரி தம்பி விஜய் நல்ல படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகர் கமல் ஹாஸன் கூறியுள்ளார்.
கமல் ஹாஸன் நேற்று அளித்துள்ள அரசியல் பேட்டியின்போது, "நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்குப் போட்டியாக இருப்பாரா?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள கமல் ஹாஸன், "விஜய் அரசியலுக்கு வந்தால் போட்டியாக இருப்பாரா? என்று கேட்கப்படுகிறது. இடையூறாக இருக்கும் பட்சத்தில் அதற்கான விமர்சனங்கள் வைக்கப்படும்.
வெற்றி பெற்ற பெரிய நடிகர்கள் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும். இந்தி நடிகர் அமீர்கான் அப்படி நடித்துக்கொண்டு இருக்கிறார். அவரைப் போலவே தம்பி விஜய்யும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை..," என்று கூறியுள்ளார்.
அரசியல் விஷயத்தில் கமலுக்கு சீனியர் விஜய். அவர் கட்சி ஆரம்பிக்கவில்லையே தவிர, விஜய் மக்கள் மன்றம் என்ற பெயரில் கிராமங்களில் கூட அமைப்பு ரீதியாக வேரூன்றி இருப்பவர். அரசியல்தான் தன் எதிர்கால லட்சியம் என்பதில் தீவிரமாக உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications