எம்எஸ்வி இசை எப்போதும் நம்மோடிருக்கும்! - கமல் ஹாஸன்
சென்னை: மெல்லிசை மன்னர் எம்எஸ்வி மறைந்தாலும், அவர் இசை என்றும் நம்மோடிருக்கும் என்று நடிகர் கமல் ஹாஸன் கூறியுள்ளார்.
எம்எஸ் விஸ்வநாதன் மறைவுக்கு கமல் அனுப்பியுள்ள இரங்கல் செய்தி:

திரு எம்எஸ்வி பிரிக்க முடியாத வகையில் தமிழ் திரையுலக வரலாற்றோடு ஒன்றிவிட்டவர். தமிழ் மற்றும் தென்னிந்திய கலாசாரச் சித்தரிப்பின் அங்கம் அவர். எம்எஸ்வி பலரின் வாழ்வின் பின்னணி இசையாகி விட்டவர். அவரது இசை தங்கள் உள்ளங்களில் ஒலிக்க, கடந்த காலத்துக்குரிய ஏக்கத்துடன் அவர்கள் தம் வாழ்வையே நினைவு கூர்கின்றனர்.
அவரது தலைமுறையையும் காலத்தையும் கடந்த ரசிகர்கள் அவருக்குண்டு. இதற்கு என் மகள் ஸ்ருதி நல்ல ஒரு உதாரணம். அமெரிக்காவில் இசை பயின்று கொண்டிருந்த அவர், திரும்பிவந்தவுடன் திரு எம்எஸ்வியைச் சந்திக்க விரும்பினார். அவர் எம்.எஸ். வி.யின் ரசிகையாகியிருந்தார்.
எம். எஸ். வி அவர்களின் தோள்களில் புகழ் இலகுவாய் அமர்ந்திருந்தது. தன் புகழையும் பெருமையையும் அலட்சியப்படுத்தி பிறரது வயதையும் பொருட்படுத்தாமல் அவர்களை அவர் அடிக்கடி புகழ்வதுண்டு. அவரது உடலை மட்டுமே நாம் இழந்திருக்கிறோம். அவரது இசை எப்போதும் நம்மோடிருக்கும். தன் இசையால் என் வாழ்வுக்குச் செறிவூட்டிய அவருக்கு என்றும் என் நன்றிகள் உண்டு.
அன்பன்
கமல் ஹாஸன்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications