கமலின் அரசியல் படம் ஓடுமா? ஓடாதா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அசத்தல் பேச்சு!

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் படம் ஓடுமா ஓடாதா என்பது இன்னும் சிறிது காலத்தில் தெரிந்துவிடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: நடிகர் கமல்ஹாசனின் அரசியல் படம் ஓடுமா ஓடாதா என்பது இன்னும் சிறிது காலத்தில் தெரிந்துவிடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கமல்ஹாசனின் அரசியல் சுற்றுப்பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Kamal's Political movie will be hit or what will be known soon: Minister Rajendira Balaji

அதற்கு பதிலளித்த அவர், கமலின் அரசியல் படம் ஓடுமா? ஓடாதா? என்பது இன்னும் சிறிது காலத்தில் தெரிந்துவிடும் என்றார். அரசியல் எவ்வளவு கரடுமுரடான பாதை என்பதை கமல் அனுபவத்தில் தெரிந்து கொள்வார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

சினிமா போன்று எளிதில் நடிப்பது அல்ல அரசியல் என்றும் அவர் கூறினார். அரசியலில் அவர்களே கதை, வசனம், எழுதி செயலாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

எந்த முன் அனுபவமும் இன்றி திடீரென கட்சி தொடங்கி உடனே ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் தமிழகம் பயங்கரவாதிகள் பயிற்சி மையமாக மாறுவதாக கூறிய பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து ஏற்கத்தக்கதல்ல என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+