கமல் என்றால் ஸ்ரீதேவி.. பிரிக்க முடியாத ஒரு ஜோடி!
Recommended Video

சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்களை வசீகரித்த ஜோடிகள் வரிசையில் கமல் - ஸ்ரீதேவிக்கு தனி இடம் உண்டு. அந்த அளவுக்கு இருவரும் இணைந்து கொடுத்த நடிப்பு தீனியை அவர்களுக்குப் பின்னர் யாருமே கொடுத்ததில்லை.
இருவரும் இணைந்து 24 படங்களில் நடித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை தமிழ்ப் படங்கள்.
இருவரும் இணைந்து கொடுத்த அத்தனை படங்களும் இருவரின் பன்முக தன்மைக்காக பெரிதும் பேசப்பட்ட பிரமாண்டப் படங்கள் என்பது முக்கியமானது.

மறக்க முடியாத மூன்று முடிச்சு
1976ம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சுதான் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்த முதல் படம். இதில் இன்னொரு ஹீரோவாக, நெகட்டிவ் ரோலில் ஜொலித்தவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப் பெரிய ஹிட்டாக அமைந்ததோடு, ஸ்ரீதேவி என்ற ஹீரோயினின் நடிப்புப் பரிமாணத்தைப் பார்த்து அனைவரையும் வியக்க வைத்தது.

மயிலு ஸ்ரீதேவி
கமல், ரஜினி ஆகிய இரு ஆளுமைகளையும் இதில் தூக்கிச் சாப்பிட்டிருப்பார் ஸ்ரீதேவி. அதன் பிறகு இருவரும் இணைந்து மிரட்டிய படம் 16 வயதினிலே. தமிழ் சினிமாவை நிஜ கிராமங்களுக்கு முதல் முறையாக கூட்டிச் சென்ற புதுமைப் படம். பாரதிராஜா, இளையராஜா போன்ற ஆளுமைகளோடு, கமலும், ஸ்ரீதேவியும் இணைந்து வெளுத்துக் கட்டிய மறக்க முடியாத படம்.

புதிய ஒளி பாய்ச்சிய சிகப்பு ரோஜாக்கள்
பிறகு வெளியான சிகப்பு ரோஜாக்கள், கமல் - ஸ்ரீதேவி மீது புதிய ஒளியைப் பாய்ச்சியது. மனிதரில் இத்தனை நிறங்களா, சக்கைப் போடு போடு ராஜா, தாயில்லாமல் நானில்லை என இவர்களின் நடிப்பு வேட்டை தொடர்ந்தது.

ஹிட் கொடுத்த கல்யாண ராமன்
தொடர்ந்து இருவரும் நடித்த படங்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படமாக கல்யாண ராமன் 1979ல் வெளியானது. தொடர்ந்து ஹிட் கொடுத்த முக்கியப் படம் வறுமையின் நிறம் சிவப்பு. இருவரது நடிப்புக்கும் புதிய அர்த்தம் கொடுத்த படம் இது. அதையடுத்து வெளியானது குரு. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரமாண்ட ஹிட்டான படம் குரு.

சின்னஞ்சிறு வயதில்
கமல் -ஸ்ரீதேவி நடிப்பில் பேசப்பட்ட இன்னொரு முக்கியப் படம் மீண்டும் கோகிலா. கமலுடன் இணைந்து இவர் போட்ட நடிப்பு கதகளியை யாராலும் இன்று வரை மறக்க முடியாது. இந்த கேரக்டரில் ஸ்ரீதேவி பின்னியிருப்பார். கமலே மிரண்டு போன வேடமும் கூட இது

மறக்க முடியாத வாழ்வே மாயம்
1982ல் வெளியான வாழ்வே மாயம், கமல், ஸ்ரீதேவி இருவருக்கும் மறக்க முடியாத படம். சோகம், அழுகை நிறைந்து வழிந்த இப்படத்தின் காதல் காட்சிகளில் கமலும், ஸ்ரீதேவியும் அப்படி மெய் மறக்க வைத்திருப்பார்கள்.

மூன்றாம் பிறை
இருவரது கெரியரிலும் மறக்க முடியாத இன்னொரு முக்கியப் படம் மூன்றாம் பிறை. கமல்ஹாசனுக்கு நடிப்புக்காக முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம் மூன்றாம் பிறை. அப்பாவித்தமான கேரக்டரில் மிரட்டியிருப்பார் ஸ்ரீதேவி. கொஞ்சம் கூட மிகை இல்லாமல் அவர் நடித்த நடிப்புக்கு இணையாக இன்னொரு நடிகை இதுவரை நடித்ததில்லை. இப்படம் சத்மா என்ற பெயரில் இந்திக்கும் போனது.

காலத்தால் மறக்க முடியாத ஜோடி
இந்தப் படங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து பெரிய ஹிட் கொடுக்கவில்லை. ஸ்ரீதேவி பின்னர் ரஜினியுடன் பிசியானார். அப்படியே இந்தியில் பெரும் நடிகையாக மாறிப் போனதால் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அதன் பிறகு கை கூடவில்லை. கமல் என்றால் கூடவே ஸ்ரீதேவி என்ற பெயரும் சேர்ந்தே வரும். அப்படி ஒரு நடிப்புப் பிணைப்பில் மூழ்கிப் போனவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா என்று ரசிகர்கள் நீண்ட காலம் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் காலம் ஸ்ரீதேவியை பிரித்துக் கொண்டு போய் அத்தனை பேரையும் ஏமாற்றி விட்டது. இருப்பினும் காலம் உள்ளவரை, கமல் -ஸ்ரீதேவியின் படங்களை ரசிகர்கள் மறக்க முடியாது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications