இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்.. கமல் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!
பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்ட இளையராஜாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. இசைத்துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்ட இளையராஜாவுக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
|
கமல்ஹாசன் வாழ்த்து
இளையராஜாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் டிவிட் செய்துள்ளார் ''எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர்.விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
விஷால் வாழ்த்து
விஷால் தனது டிவிட்டில் ''இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷணை இசைக்கடவுள் இளையராஜாவுக்கு வழங்கி இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். உங்களால் எங்கள் அனைவருக்கும் பெருமை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

விஜயகாந்த் வாழ்த்து
விஜயகாந்த் தனது வாழ்த்தில் ''பத்ம விபூஷணை பெற்றுள்ள இளையராஜாவிற்கு வாழ்த்துக்கள். கிராமிய இசையை உலகம் எங்கும் கொண்டு சென்றவர் அவர். அவர் மக்களுக்கு பெருமையை சேர்த்து இருக்கிறார். அவர் இன்னும் பல விருதுகளை வாங்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ரஜினி
இதேபோல் நடிகர் ரஜினி இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார். தமிழ்நாட்டிற்கும் , இசைக்கும் பெருமை சேர்த்ததாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications