ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் தருவீர்களா?... கமல் சொன்ன நச் பதில்!
ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் தருவீர்களா என்று கேட்டதற்கு நிச்சயமாக தரமாட்டேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை : ஒரு வேளை ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கு குவாட்டரும், பெண்களுக்கு ஸ்கூட்டரும் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் நச் பதிலை அளித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடை மாநாட்டில் உரையாற்றிய பின்னர், கேள்வி பதில் பிரிவு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மக்களின் சில கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது ஒருவர் கேட்டிருந்த கேள்வியானது மேடையில் கமலிடம் படித்துக் காட்டப்பட்டது.

உங்களுக்கு வாக்களித்து ஒருவேளை நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், ஆண்களுக்கு குவாட்டரும் பெண்களுக்கு ஸ்கூட்டரும் திட்டம் நீடிக்குமா என்று ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார் அதற்கு உங்களின் பதில் என்ன?
நான் முன்னாடியே சொல்லிவிட்டேன், குவாட்டரும் ஸ்கூட்டரும் தர மாட்டேன். நீங்கள் மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித் தரும் வகையில் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அப்படி செய்தால் நீங்கள் இலவசங்களை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வள்ளல்கள் ஆவீர்கள்.
ஒரு வள்ளலை சுற்றி 10 ஏழைகள் இருப்பதை விட, 10 வள்ளல்கள் இருந்தார் நாடே ஏழைகள் இல்லாத நாடாகிவிடும். ஏழ்மைக்கே ஏழ்மை வந்துவிடும் என்று கமல்ஹாசன் பதில் அளித்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications