களத்திற்கு வாங்க... கமல் வீடியோ மூலம் வித்தியாசமான அழைப்பு!
கமல் தன்னுடைய கட்சியில் சேர விரும்புவோருக்கு வித்தியாசமான அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை : கமல் புதிதாக தொடங்கியுள்ள கட்சியில் சேர விரும்புவோருக்கு வித்தியாசமான அழைப்பை விடுத்துள்ளார். தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மய்யம் கட்சியில் சேர விரும்புவோருக்கான அழைப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் கட்சியை மதுரையில் பிப்ரவரி 21ம் தேதி அறிமுகம் செய்தார். மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி மாற்றத்திற்கான அரசியல் பாதை என்று கமல் பிரகடனம் செய்தார். இந்நிலையில் இன்று கமல் திண்டுக்கல், சிவகங்கையில் மேற்கொள்ள இருந்த நாளை நமதே பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை திரும்பியுள்ளார்.

விரைவில் மீண்டும் தனது பயணம் திட்டமிடப்பட்டு நாளை நமதே பயணம் தொடங்கும் என்று கமல் கூறியுள்ளார். இந்நிலையில் கமல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தோன்றும் கமல் "நீங்க தமிழ்நாட்டுல நிம்மதியா இருக்கறீங்கன்னா இந்த வீடியோவை நீங்க பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு நடப்பும் அரசியலும் நல்லபடியா நடந்து கொண்டிருக்கிறது என்று நம்பினால் இந்த வீடியோ உங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல நீங்க போகலாம் என்று சொல்கிறார்.
Sign up! #MakkalNeedhiMaiam #Maiam #JoinMNM https://t.co/yPfOjKkQAH
— Kamal Haasan (@ikamalhaasan) February 22, 2018
பின்னர் சில விநாடிகள் தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு ஓ நீங்க இன்னும் போகலையா, அப்ப நீங்க நம்ம கட்சி, இன்னும் என்ன பண்றீங்க களத்துக்கு வாங்க என்று சொல்லி முடிக்கிறார். இறுதியில் சைன் அப் செய்யுங்கள் மையம்.காம் என்ற இணையதள முகவரியுடன் வீடியோ முற்றுபெறுகிறது.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications