கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து சரியில்லை... என் ஆயுசுக்குள் சரி செய்வேன்... கமல்
தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து சரியில்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியன சரியில்லை என்றும் இந்தியாவை பெருமையடையச் செய்வேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்தும், ஆட்சியாளர்கள் குறித்து கமல் பேசிவந்தார். மேலும் தான் அரசியல் கட்சியை தொடங்க போவதாகவும் அவர் அறிவித்தார். எனினும் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. அந்த தேர்தலில் போட்டியிடுவோர் குறித்தும் எதையும் பேசவில்லை.
ஆர்கே நகர் தேர்தல் முடிந்த பிறகு அங்கு பணம் விளையாடியது குறித்தும் திருடனிடமே பிச்சை எடுக்கும் மக்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

அரசியல் கட்சி...
ராமேஸ்வரத்தில் இருந்து வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்குவேன் என்று கமல் அறிவித்திருந்தார். மேலும் கலாம் வீட்டிலிருந்து தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பெருமை
இந்நிலையில் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன். இந்தியாவின் பயணம் தமிழகத்தில் இருந்து தொடங்கும்.

சகோதரர்கள்
எனது அரசியல் பயணம் அடுத்த மாதம் தொடங்குகிறது. அப்போது தொடங்க உள்ள பயணத்தில் சகோதரர்கள் கிடைப்பார்கள்.

மருத்துவம் சரியில்லை
தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவை சரியாக இல்லை. இவற்றை டிஜிட்டல் முறையில் சரி செய்யவே வந்துள்ளேன். இவ்வாறு கமல் தெரிவித்தார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications