ஒரு சில எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் ரூ 2 கோடி வரை பணம் தரப்பட்டது.. கனகராஜ் எம்எல்ஏ #MLAsForSale

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சில எம்எல்ஏக்களுக்கு மட்டும் ரூ.2 கோடி பணம் மற்றும் தங்கம் தரப்பட்டதாக சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கூறியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தவர் சூலூர் எம்எல்ஏ கனகராஜ். சசிகலா அணியைச் சேர்ந்த அவர் கூவத்தூர் விடுதியில் இருந்தவர். அப்போது அவர் பேசிய வீடியோ ஆதராத்தை டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்காகவே கூவத்தூரில் தங்கியிருந்ததாக கூறியுள்ளார்.

Kanakaraj MLA says, gold and money were promised at the time of trust vote

அதிமுக அரசை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அங்கு இருந்ததாகவும் தெரிவித்துள்ள கனகராஜ், எங்களுக்கு இங்கு எந்த பிரச்சினையும் இல்லை, எம்எல்ஏக்கள் அனைவரும் மகிச்சியாக இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்க ஒரு சில எம்எல்ஏக்கள் ரூ.2 கோடி பணம் மற்றும் நகை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் பணம், நகை தருவதாக உறுதி அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் எம்எல்ஏ கனகராஜ்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
sulur Kanakaraj MLA says, gold and money were promised at the time of trust vote
Please Wait while comments are loading...