காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார்
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (வயது 83) உடல்நலக் குறைவால் காலமானார்.
சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

1994-இல் பொறுப்பேற்பு
ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயேந்திரர் காலமானார். இதையடுத்து அவரது உடல் சங்கர மடத்துக்கு கொண்டு வரப்பட்டு பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காஞ்சி மடத்தின் 69-வது மடாதிபதியாக 1994-ம் ஆண்டு ஜெயேந்திர சரஸ்வதி பொறுப்பேற்றார்.

1954-இல் நியமனம்
முன்னதாக 1954-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டார் காஞ்சி ஜெயேந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 19-ஆவது வயதில் அவர் இளைய மடாதிபதி ஆனார்.

நடை சாத்தப்படுகிறது
ஜெயேந்திரரின் மறைவையொட்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்படுகிறது. அங்கு சுவாமி தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

வழக்கில் விடுதலை
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் 2005-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். பின்னர் 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்படுவதாக புதுவை நீதிமன்றம் 2013-இல் தீர்ப்பு வழங்கியது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications