கருணாநிதி ஆட்சியின் சாதனைப் பட்டியலுடன் ஓட்டு வேட்டையைத் தொடங்கும் கனிமொழி
சென்னை: திமுக எம்.பி. கனிமொழி சேலத்தில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று துவங்குகிறார். திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி இன்று முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார். அவர் சேலம் மாவட்டத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார்.

முன்னதாக அவர் திமுக தலைவரும் தனது தந்தையுமான கருணாநிதியை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்களை சந்திக்காதவர், அவர்களின் குறைகளை தீர்த்து வைக்காதவர் ஜெயலலிதா. அவர் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் அமல்படுத்தவில்லை. தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்குவேன் என்றதையும் செய்யவில்லை. தமிழகம் தொழில்துறை பின்னோக்கி செல்கிறது.
தமிழக மக்கள் மதுவிலக்கை அமல்படுத்துமாறு கூறி வருகின்றனர். ஆட்சியில் இருந்தபோது அதை கண்டுகொள்ளாமல் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறுவது ஏமாற்று வேலை.
திமுக தேர்தல் அறிக்கை, கருணாநிதியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்பேன். அதிமுக ஆட்சிக்கு மாற்று திமுக தான், கருணாநிதி தான் என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications