For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனிமொழிக்கு பிறந்த நாள் பரிசாக 'மகளிர் அணி செயலர்' பதவி- கருணாநிதி இன்று அறிவிப்பு?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமது பிறந்த நாள் பரிசாக அவருக்கு 'மகளிர் அணி' செயலாளர் பதவியை தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவிக்கக் கூடும் என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனிமொழியின் பிறந்த நாளை "மனிதநேய தினம்" என்ற பெயரில் அவரது ஆதரவாளர்கள் இன்று கொண்டாடுகின்றனர். இதற்கான சென்னையில் பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றனர்.

Kanimozhi to be made secretary of DMK’s women’s wing?

இந்த போஸ்டர்களில் 'தமிழ் இன முதல்வரின் காவிய புதல்வி' என்றெல்லாம் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இது மு.க.ஸ்டாலின் தரப்பை ஆத்திரமடையச் செய்துள்ளது. பல இடங்களில் கனிமொழியின் பிறந்தநாள் சுவரொட்டிகளை ஸ்டாலின் ஆதரவாளர்கள் கிழித்ததாகவும் இதை கருணாநிதி கண்டித்ததாகவும் தெரிகிறது.

Kanimozhi to be made secretary of DMK’s women’s wing?

இந்நிலையில் கனிமொழிக்கு தமது பிறந்த நாள் பரிசாக தி.மு.க. மகளிர் அணி மாநிலச் செயலாளர் பதவியை கருணாநிதி இன்று அறிவிக்கக் கூடும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Kanimozhi to be made secretary of DMK’s women’s wing?

அழகிரி வாழ்த்து..

இதனிடையே சென்னையில் முகாமிட்டிருக்கும் தி.மு.க.வின் முன்னாள் தென்மண்டல அமைப்பு செயலாளரான மு.க. அழகிரி தங்கை கனிமொழியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
Sources close to DMK chief M. Karunanidhi say on condition of anonymity that the nonagenarian politician is thinking seriously about making his daughter and Rajya Sabha MP Kanimozhi in-charge of the women’s wing of the party, thereby giving her a more active role in the party’s affairs. Karunanidhi is consulting party treasurer M.K. Stalin and general secretary Anbazhangan in this regard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X