23, 24 தேதிகளில் ஏற்காடு தேர்தலில் கனிமொழி தீவிரப் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏற்காடு இடைத் தேர்தலி்ல் போட்டியிடும் திமுக வேட்பார் மாறனை ஆதரித்து அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
மாறன் தற்போது தொகுதியில் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல அதிமுக வேட்பாளர் சரோஜாவும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் மாறனை ஆதரித்து கனிமொழி 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்.
23ஆம் தேதி மாலை 5 மணிக்கு தும்பல் பகுதியில் பிரசாரம் செய்யும் கனிமொழி, இரவு 7 மணிக்கு சிங்கபுரம் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.
24ஆம் தேதி பகல் 12 மணிக்கு ஏற்பாடு பகுதியிலும், மாலை 6 மணிக்கு அயோத்தியாபட்டனம் ராமர் கோவில் திடலிலும் கனிமொழி பிரசாரம் செய்கிறார் என்று திமுக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications