கணவர் அரவிந்தனுடன் மருத்துவமனைக்கு வந்த கனிமொழி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பிவந்த கனிமொழி

    சென்னை: காலையில் வீட்டிற்கு சென்ற திமுக எம்.பி. கனிமொழி சிறிது நேரத்தில் தனது கணவர் அரவிந்தனுடன் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதி கடந்த 28ம் தேதி முதல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    Kanimozhi comes back to hospital with husband

    அவரின் உடல்நிலை அளிக்கும் ஒத்துழைப்பை பொறுத்தே எதுவும் கூற முடியும் என்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு 10 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து கிளம்பிய திமுக எம்.பி. கனிமொழி சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்தார். இரவு முழுக்க மருத்துவமனையில் இருந்து தந்தையை கவனித்துக் கொண்ட அவர் காலையில் வீட்டிற்கு கிளம்பினார்.

    வீட்டிற்கு சென்ற வேகத்தில் தனது கணவர் அரவிந்தனுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதில் இருந்து திமுக தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.

    இருப்பினும் தலைவர் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையை அவர்கள் கைவிடவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+