டிஸ்சார்ஜ் ஆனார் கனிமொழி
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கனிமொழிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதாக கூறி அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
கனிமொழிக்கு என்னவாயிற்று என்று திமுகவினரும் பதட்டமடைந்தனர். இந்த நிலையில் காவேரி மருத்துவமனை ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அதில், கனிமொழி எம்.பி., ஞாயிற்றுக்கிழமை காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடலளவிலும் மனதளவிலும் சோர்வாகக் காணப்பட்டார்.

கனிமொழிக்கு ஏற்பட்டுள்ள மயக்கம் மற்றும் உடல் சோர்வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குளுகோஸ் செலுத்தப்பட்டது. சில நாட்கள் முழுமையான ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அவரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுமையாக நலமடைந்து விரைவில் மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவருக்கு வேறு உடல் நல பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறிய டாக்டர்கள் நேற்று மாலை அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். இதையடுத்து கனிமொழி நேற்று மாலையில் தனது வீடு திரும்பினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications