சென்னை எழும்பூர் – மதுரை இடையே ஜனசதாப்தி அதிவிரைவு இயக்கவேண்டும்: கனிமொழி
சென்னை: சென்னை எழும்பூர் - மதுரை இடையே ஜனசதாப்தி அதிவிரைவு ரயில் தினமும் இயக்கப்பட வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய ரயில் திட்டங்கள் குறித்து, மத்திய ரயில்வே அமைச்சருக்கு கனிமொழி அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
லோகமான்ய திலக் எர்ணாகுளம் வரை செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். சென்னை-மதுரை துரந்தோ ரயில் திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.

சிலம்பு எக்ஸ்பிரஸ்
சென்னை- மானாமதுரை சிலம்பு எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட வேண்டும். மங்களூர்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட வேண்டும். திருச்சி-அவுரா வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட வேண்டும். மதுரை-டேராரூன், சண்டிகர் வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் ஒருமுறை கன்னியாகுமரி வரையிலும் ஒருமுறை ராமேஸ்வரம் வரையிலும் நீட்டிக்கப்பட வேண்டும்.

திருக்குறள் எக்ஸ்பிரஸ்
கன்னியாகுமரி-நிஜாமுதீன் வாரமிருமுறை திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் இயக்கப்பட வேண்டும். கன்னியாகுமரி - புதுச்சேரி வாரம் ஒருமுறை இயக்கப்படும் ரயில் தினந்தோறும் இயக்கப்பட வேண்டும்.

எழும்பூர் – மதுரை ஜனசதாப்தி
சென்னை எழும்பூர் - மதுரை இடையே ஜனசதாப்தி அதிவிரைவு ரயில் தினமும் இயக்கப்பட வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு தினமும் அதிவிரைவு ரயில் இயக்கப்பட வேண்டும்.

ராமேஸ்வரம் சூப்பர் பாஸ்ட்
சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே தினசரி அதிவிரைவு ரயில் இயக்கப்பட வேண்டும். கேரளாவின் கொச்சுவேலியில் இருந்து திருநெல்வேலி, திருச்சி வழியாக வேளாங்கன்னி - காரைக்காலுக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என்று கனிமொழி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications