சவுதியில் முதலாளியால் கை வெட்டப்பட்ட தமிழகப் பெண்... மீட்கக் கோரி சுஷ்மாவுக்கு கனிமொழி கடிதம்
சென்னை: சவுதியில் முதலாளியால் வலது கை வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள மூங்கிலேறி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம் (55). இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலை செய்யும் பணிக்காகச் சென்றார்.

இந்நிலையில் வெளிநாட்டு வேலையாட்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகிறதா என்று அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது கஸ்தூரி தனது முதலாளி தன்னை கொடுமைப்படுத்தி வருவதாக அவர்களிடம் முறையிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த முதலாளி கஸ்தூரியின் வலது கையை கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கஸ்தூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகப்பெண் கஸ்தூரியை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
தன் முதலாளியால் சித்ரவதை செய்யப்பட்டு கொடிய முறையில் வலது கை வெட்டப்பட்ட நிலையில் கஸ்தூரி, ரியாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் பதற்றம் அடைந்திருக்கிறார்கள்.
கஸ்தூரியை அவசரமாக தமிழ்நாட்டுக்கு கொண்டுவர உதவுமாறு என்னிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். கை வெட்டப்பட்ட கஸ்தூரிக்கு அங்கே முறையான சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்றும், அவரது நிலைமை விரைவாக மோசமடைந்துவருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
எனவே நீங்கள் (சுஷ்மா சுவராஜ்) உடனடியாக இந்திய தூதரக அதிகாரிகளை அறிவுறுத்தி, எவ்வளவு விரைவாக கஸ்தூரியை இந்தியாவுக்கு அழைத்து வரமுடியுமோ, அவ்வளவு விரைவாக அழைத்து வர நடவடிக்கை எடுத்திடவேண்டும். இந்த கோரிக்கையை கஸ்தூரியின் குடும்பத்தினரின் சார்பாக உங்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications