தமிழகத்தில் கன்னடர்களுக்கு துளி பீதியும் இல்லை... எப்போது பாடம் கற்கும் கர்நாடகா?
காவிரி தீர்ப்பு வருவதால் கர்நாடகா வாழ் தமிழர்கள் இயல்பாகவே அச்சமடைகின்றனர். ஆனால் தமிழகம் வாழ் கன்னடர்கள் இயல்பு வாழ்க்கையை துளி பீதியுமின்றி கடக்கின்றனர்.
Recommended Video

சென்னை: காவிரி பிரச்சனை, கன்னட மொழி விவகாரங்களில் தமிழர்கள் மீது குரோத மனப்பான்மையை காலந்தோறும் காட்டி வருகிறது கர்நாடகா. ஆனால் தமிழகத்தின் ஒரு அங்கமாகவே வாழும் கன்னட மொழி பேசும் மக்கள் தமிழ் நிலத்தில் ஒருபோதும் துன்பப்படுத்தப்பட்டதே இல்லை என்பதில் இருந்து கர்நாடகா எப்போது பாடம் கற்கும் என்பதுதான் தெரியவும் இல்லை.
தென்னிந்திய நிலப்பரப்பின் மாநிலங்களில் பிற மாநிலத்தவர் பெருமளவில் கலந்து இணந்து வாழ்வது பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. இப்படித்தான் கர்நாடகாவிலும் தமிழர்கள் வாழ்கின்றனர்,
தமிழகத்தில் கன்னட மொழி பேசுகிற சமூகத்தினரும் வசிக்கின்றனர். சென்னை முதல் கோவை வரை, ஓசூர் முதல் கம்பம் வரை கன்னட மொழி பேசும் மக்கள் தமிழகத்தில் கணிசமாக இருக்கின்றனர்.

தமிழரை சீண்டும் கன்னட அமைப்புகள்
கர்நாடகாவில்தான் தமிழர்களை சீண்டுவது, தாக்குவது, கன்னட மொழியில் பேசு என துன்புறுத்துவது, தமிழர் நிறுவனங்களை சூறையாடுவது, தீக்கிரையாக்குவது என்கிற உச்சகட்ட வன்முறைகள் நடந்தேறுகின்றன. ஆனால் இந்த வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் பேசும் அதே கன்னட மொழியை பேசுகிற மக்கள் தமிழகத்தில் ஒருவித அச்சுறுத்தலுக்கும் இல்லாமல் இயல்பு வாழ்க்கை வாழ்கின்றனர்.

எப்போதாவது எதிர்வினைகள்
கர்நாடகாவின் அத்துமீறல்களின் எதிர்வினையாக சென்னையில் கன்னட பள்ளி, ஹோட்டல்கள் எப்போதாவது தாக்கப்படும், ஆனால் இங்கே தமிழர்களாக வாழுகிற கன்னட மொழி பேசுகிற மக்கள் ஒருநாளும் பீதியை எதிர்கொண்டதே இல்லை.

பண்பாட்டை போற்றும் தமிழகம்
அந்த அளவுக்கு நாகரிகத்தையும் பண்பாட்டையும் தமிழ் மண் பாதுகாக்கிறது. இன்று கூட காவிரி வழக்கில் தீர்ப்பு வரப் போகிறது... என்ன நடக்குமோ என கர்நாடகா வாழ் தமிழர்கள் அச்சத்துடன் உள்ளனர்.

பீதியில்லாத தமிழகம் வாழ் கன்னடர்கள்
ஆனால் தமிழகம் வாழ் கன்னட மொழி பேசும் மக்களுக்கு அப்படி ஒரு விஷயமே கூட தெரியாது. அந்த அளவுக்கு தமிழகம் பண்பட்ட மண்ணாக இருக்கிறது. கன்னடர்களைப் போல தமிழகமும் எதிர்வினை காட்டினால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை கர்நாடகா எப்போதுதான் சிந்திக்கும் என்பதுதான் கேள்விக்குறி.












Click it and Unblock the Notifications