தாத்தா கருணாநிதிக்கு பேத்தி பாடிய கண்ணே கலைமானே பாடல் - வைரல் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கருணாநிதிக்கு பேத்தி பாடிய கண்ணே கலைமானே பாடல்

  சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது பேத்தி கண்ணே கலைமானே என்ற பாடலை பாடி உற்சாகப்படுத்தினார். பேத்தி பாடிய பாடலை கருணாநிதி ரசித்து கேட்பதும், பேத்திக்கு முத்தமிடும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

  வயது முதுமை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, கோபாலபுரம் இல்லத்தில் ஒய்வெடுத்து வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அறிவாலயம் வந்து செல்கிறார் கருணாநிதி.

  Kanne kalaimane songs for Karunanidhi Viral Video

  வீட்டில் ஓய்வெடுக்கும் போது, பேரன்களுடன் அவர் கிரிக்கெட் ஆடுவது, பேரன் பேத்திகளுடன் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

  இரு தினங்களுக்கு முன்பு, காவிரிக்காக கருப்புச் சட்டை அணிந்து, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தார் கருணாநிதி.

  இந்த நிலையில் தேவர்மகன் சிவாஜி போல தனது பேத்திகளுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. மூன்றாம்பிறை படத்தில் கமல் பாடிய கண்ணே கலைமானே என்ற திரைப்படப் பாடலை பேத்தி பாட அதை கருணாநிதி ரசித்து கேட்கும் வீடியோ காட்சி நேற்று வெளியானது.

  பாட்டுப் பாடிய பேத்தியை கருணாநிதி வாழ்த்து கூறும் காட்சியும், அதில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் துள்ளி விளையாடும் குழந்தைகளின் கரம் பற்றி முத்தமிடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK Chief Karunanidhi's great grand daughter has sung a Song Kanne Kalaimane,a Video going to viral on social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற