கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்
சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்படவிருந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கன்னியாகுமரி - எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன்படி, வண்டி எண். 12634 சென்னை எழும்பூரில் இருந்து, கன்னியாகுமரிக்கு இன்று மாலை 5.20 மணியளவில் புறப்படவிருந்தது.

ஆனால், இதற்கான இணைப்பு ரயில் வருகையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், இன்றிரவு 9.30 மணியளவில் எழும்பூரில் இருந்து புறப்படும் என்று, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications