நகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி
காரைக்குடி: அனைவருக்கும் கல்வி இயக்கம், பெண் கல்வித் திட்டம் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளி மாணவிகளுக்கான கராத்தே முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இத்திட்டத்தின் துவக்கவிழா இன்று தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பயிற்சியாளர் பிரகாஷ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பட்டதாரி ஆசிரியை ஏ. கீதா அனைவரையும் வரவேற்றார். இத்திட்டத்தின் மூலம் 7 மற்றும் 8 ம் வகுப்பில் பயிலும் 5௦ மாணவிகளுக்கு வாரத்தின் இரு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி 5 மாதங்களுக்கு அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியை கராத்தே மாஸ்டர் பிரகாஷ் அளிக்கவுள்ளார். பட்டதாரி ஆசிரியை எஸ்.சித்ரா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியை விஜயலெட்சுமி நன்றி கூறினார்.

-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications