நடிகர் யூகிசேது, இயக்குநர் கதிரவன் பங்கேற்புடன் நெல்லை பல்கலை.யில் 11-ம் ஆண்டு "கரிசல் திரைவிழா"

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கரிசல் திரைவிழாவில் நடிகர் யூகிசேது, இயக்குநர் கதிரவன் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் கரிசல் திரைவிழா நடைபெறும். 11-வது ஆண்டு கரிசல் திரைவிழா நேற்று மாலை தொடங்கியது.

பல்கலையின் தொடர்பியல் துறை தலைவர் கோவிந்தராஜ் பெரியசாமி வரவேற்றார். திரைப்பட இயக்குனரும், நடிகருமான யூகி சேது பங்கேற்று திரைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் "கோடைமழை" திரைப்பட இயக்குநர் கதிரவன், பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, தேர்வாணையர் பிரபாகர், தொலைநெறி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு நடிகர் யூகிசேது பதில் அளித்தார்.

முன்னதாக நடைபெற்ற தப்பாட்டம், கரகம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் பரவசப்படுத்தியது.

இன்றும் நடைபெறும் கரிசல் திரைவிழாவில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+