கர்மவீரர் காமராஜரின் 121வது பிறந்தநாள்.. ரத்த தானம் கொடுக்க சிவகாசிக்கு வாங்க

Subscribe to Oneindia Tamil

சிவகாசி: பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் ஜூலை 09ஆம் தேதி சிவகாசியில் நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா பள்ளி, கல்லூரிகளில் கல்வி வளர்ச்சி நாளாகவும், பல்வேறு இடங்களில் கல்வித் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு 15.07.1903 அன்று மகனாகப் பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களின் அறிமுகத்தால் 1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார்.

Karma Veerar Kamarajars 121st Birthday blood donation camp in Sivakasi

930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். இதனைத் தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர்மன்றத் தலைவராகவும், 1952 ஆம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கி மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட கர்மவீரர் காமராசர் அவர்கள், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள்தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார். ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார்.

Karma Veerar Kamarajars 121st Birthday blood donation camp in Sivakasi

தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார். காமராஜர் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரிகளில் கல்வி வளர்ச்சி நாளாகவும், பல்வேறு இடங்களில் கல்வித் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

காமராஜரின் 121வது பிறந்தநாள் ஜூலை 15ம் தேதி கொண்டாப்படுகிறது. இதனையொட்டி காமராஜர் ரத்ததானக் குழுவும் சிவகாசி அரசு மருத்துவமனையும் இணைந்து 19 ஆண்டுகளாக ரத்ததான முகாம் நடத்தி வருகின்றனர். 20 வது ஆண்டாக வரும் ஜூலை 09ஆம் தேதி ஞாயிறன்று சிவகாசி கேஎஸ்எஸ் பெரிய கருப்ப நாடார், கேஎஸ்எஸ் பழனியப்ப நாடார் கல்யாண மண்டபத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. பெண்களும் இந்த முகாமில் தயக்கமின்றி பங்கேற்கலாம் என்று காமராஜர் ரத்ததானக்குழு அழைப்பு விடுத்துள்ளது. ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் 9894845035 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+