கால் முறிந்த மூதாட்டி... பெங்களூரு ஆம்புலன்ஸ் தமிழகம் வர மறுப்பு... பல கார் மாறி வீடு சேர்ந்த அவலம்
தருமபுரி: கால் எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூதாட்டியை தமிழகத்திற்கு கொண்டு வர கர்நாடக ஆம்புலன்ஸ்கள் மறுத்துவிட்டதால் தமிழக எல்லை வரை ஒரு வாடகை காரிலும், பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குச் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த காரிலும் மாறி மாறி பயணம் செய்து கடும் சிரமத்திற்கு இடையே வீடு சென்று சேர்ந்துள்ளார் 78 வயதான மூதாட்டி.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தம். 78 வயதான இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தர்மபுரியில் இருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தொடர் சிகிச்சை முடிந்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்து தமிழகத்திற்கு வந்து விட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தமிழகத்திற்கு 78 வயது மூதாட்டியை கொண்டு வந்து சேர்க்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அங்குள்ள பல்வேறு ஆம்புலன்ஸ் சர்வீசிடம் கேட்ட போதும் பலன் ஏதும் இல்லை.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து வாடகை கார் மூலம் மூதாட்டி சொந்த ஊருக்கு புறப்பட்டார். கர்நாடக பதிவெண் கொண்ட கார்கள் தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டதால் மூதாட்டி எல்லையிலேயே இறங்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. மீண்டும் தமிழக எல்லையில் இருந்து தமிழக கார் ஒன்றை புக் செய்து அங்கிருந்து சொந்த ஊருக்கு மூதாட்டி சென்று சேர்ந்துள்ளார்.
காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மூதாட்டி இப்படி கார் விட்டு கார் ஏறி இறங்கி அலைகழிக்கப்பட்டு பெரும் அவதிக்கு உள்ளானார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications