சும்மாவே உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்காதே, இப்போது எப்படி?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தீர்ப்பு வெளியாகும் நேரம் பட்ஜெட் தாக்கல் செய்யும் சித்தராமையா....வீடியோ

    சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகளை தொடர்ச்சியாக மீறி வரும் கர்நாடகா இன்று உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்று செயல்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழகம்-கர்நாடகா நடுவே, காவிரி விவகாரம் நூற்றாண்டுகளாக தொடருகிறது. எப்போதுமே தமிழகத்திற்கு முழு மனதோடு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட்டதில்லை.

    பேச்சுவார்த்தைகள் பலன் அளித்தது கிடையாது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தே தண்ணீர் பெறும் சூழ்நிலை.

    தங்கள் சொத்து

    தங்கள் சொத்து

    காவிரி என்பதை தங்களது சொந்து என கர்நாடகா நினைப்பதுதான் இதற்கு காரணம். எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து அதன் கட்டுப்பாட்டில் காவிரி நீர் திறப்பு விஷயங்களை கண்காணிக்க செய்வது நல்ல முடிவாக இருக்கும் என்பது தமிழக தரப்பு வாதம். காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பிலும் இதை கூறியிருந்தது.

    உச்சநீதிமன்றம் உத்தரவு

    உச்சநீதிமன்றம் உத்தரவு

    காவிரி நடுவர்மன்றம் 2007ல் அளித்த இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று 2016 செப்டம்பர் 30ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், மேலாண்மை வாரியத்துக்கான உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களான கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகியவை அக்டோபர் 1ம் தேதி மாலை 4 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    தமிழகம் நியமனம்

    தமிழகம் நியமனம்

    இந்த உத்தரவின் விவரத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கடிதம் மூலம் மத்திய நீர் வளத் துறை, செப்டம்பர் 30ம் தேதி தெரிவித்தது. இதன்படி, தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியன், புதுச்சேரி சார்பில் அம்மாநில பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் பி.சுவாமிநாதன் ஆகியோரின் பெயர்கள் மத்திய நீர் வளத் துறை அமைச்சகச் செயலர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    தண்ணீர் திறக்க வேண்டும்

    தண்ணீர் திறக்க வேண்டும்

    காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அக்டோபர் 1 முதல் 6ம் தேதி வரை தினமும் வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறக்க பிறப்பித்த உத்தரவையும் அம்மாநில அரசு செயல்படுத்தவில்லை. இதற்கிடையே, கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம், சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் ஆகியவற்றைக் கூட்டி உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க அம்மாநில அரசு முடிவு செய்தது.

    தேர்தல் நேரம்

    தேர்தல் நேரம்

    உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காமல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்ததுதான் கர்நாடகா. இந்த நிலையில், இப்போது, கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், இப்போது மட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டாலும், தேர்தலை மனதில் வைத்து கர்நாடக அரசு அதை செய்யாது என்கிறார்கள் இப்பிரச்சினையை உற்று நோக்குபவர்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+