"கப்சிப்"பென்று காவிரியில் 217 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட்ட கர்நாடகா....!
சென்னை: காவிரியில் நடப்பாண்டில் இதுவரை 217 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளதாம். இது காவிரி டிரிப்யூனல் நிர்ணயித்த அளவை விட 30 டிஎம்சி கூடுதல் என்கிறார்கள் தமிழக அரசுத் தரப்பில்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும். இதில் மாதா மாதம் எவ்வளவு வழங்க வேண்டும் என்பது முதற்கொண்டு கர்நாடகம் ஆண்டுதோறும் தண்ணீரை எப்படி, எந்த காலகட்டத்தில் வழங்க வேண்டும் என்பதையும் நடுவர் மன்றம் தெளிவாக நிர்ணயித்துள்ளது.

ஜூன் முதல் அடுத்த ஜூன் வரை இந்த காலகட்டம் அடங்கும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த மார்ச் வரை காவிரியில் 217 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளதாம். இது (இந்த காலகட்டத்தில்) காவிரி நடுவர் மன்றம் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக, 30 டி.எம்.சி. தண்ணீராகும்.
ஏப்ரல், மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வேண்டும். இருப்பினும் ஏப்ரல் மாதம் இதுவரை 1.4 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. அடுத்துள்ள மாதத்திலும் கர்நாடகம் நிர்ணயித்த அளவுக்கு தண்ணீரைத் திறந்து விட்டால் தமிழகத்தின் நீர்ப் பிரச்சினை வெகுவாக தீரும்.
கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபிணி ஆகியவற்றில் போதிய அளவுக்குத் தண்ணீர் உள்ளது. இரு அணைகளிலும் சேர்த்து மொத்தமாக 32 டிஎம்சி அளவுக்கு நீர் உள்ளது. எணவே கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் இல்லை என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications