காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும்! கர்நாடக மாநில திமுக நிர்வாகிகளுக்கு துரைமுருகன் வேண்டுகோள்!
சென்னை: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என கர்நாடக மாநில திமுக அமைப்பினருக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
224 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியாக இன்று வெளியிட்டுள்ளது.
பாஜகவுக்கு சற்றும் சளைக்காமல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமாடி வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ராகுல்.
இப்படியாக காங்கிரஸ், பாஜக இடையேயான வாக்குறுதிகளால் கர்நாடக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநில திமுக அமைப்பினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு;

''வருகிற 2023 மே 10 அன்று கருநாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை கருநாடக மாநிலக் கழக அமைப்பு நிர்வாகிகள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.''
''கருநாடக மாநிலக் கழக அமைப்பு சார்பில் தேர்தல் பணிக்குழு அமைத்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மநீம தலைவர் கமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications