காமராஜரின் புகழ், தியாகத்துக்கு களங்கம் ஏற்படுத்தவில்லை: கார்த்தி ப.சிதம்பரம் விளக்கம்
சென்னை: காமராஜரின் புகழ் மற்றும் தியாகத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தாம் பேசவில்லை என்று கார்த்தி ப. சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சத்தியமூர்த்தி பவனில் கடந்த 20.11.2014 அன்று நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் நான் பேசிய கருத்துகள் அனைத்து நாளிதழ்களிலும் தெளிவாக வெளிவந்துள்ளது. இது குறித்து அவரவர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் என்ன பேசினேன் என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இவர்கள் தெரிவிக்கின்ற கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.
My Press Statement @TOIIndiaNews @TamilTheHindu @dinamalarweb @DINAMANI pic.twitter.com/9knmma145g
— Karti P Chidambaram (@KartiPC) November 22, 2014 பெருந்தலைவர் காமராஜருடைய செயல்பாடுகளும், தியாகங்களும் மிகுந்த மரியாதைக்குரியது. அமெரிக்க தேர்தலில் கூட ஒபாமா 100 ஆண்டுகளுக்கு மேல் கருப்பர் இனம் அடிமைப்பட்ட கடந்த காலத்தை விட்டுவிட்டு எஸ் வீ கேன் என்கின்ற எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டுகின்ற கோஷத்தை முன்வைத்து வெற்றி பெற்றார்.
இந்திய அளவில் பி.ஜே.பி.யின் அடிப்படை கொள்கையான ராம ராஜ்யம் அமைப்போம் என்றோ மீண்டும் வாஜ்பாய் ஆட்சியை கொண்டு வருவோம் என்று முன்வைக்காமல் மோடி அரசு என்ற கோஷத்தை முன்வைத்து தான் வெற்றி பெற்றனர்.
தமிழகத்தில் கலைஞர் கழக அரசு என்றும் ஜெயலலிதா எனது அரசு என்று தான் முன் வைத்து வெற்றி கண்டுள்ளனர். நாம் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்று முன்வைக்கும் அதே வேளையில் நம்முடைய சரித்திர சாதனைகள், சரித்திர தியாகங்களை மட்டுமே வைத்து மக்களை கவர முடியாது. நம்முடைய நிகழ்கால நிலைப்பாடு குறித்தும் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் தொழில் வளம், இளைஞர் நலன், அடிப்படை வசதிகள் போன்ற தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை முன்வைக்க வேண்டும்.
இதுதான் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் நான் தெரிவித்த கருத்து. பெருந்தலைவரின் புகழுக்கோ, தியாகத்திற்கோ களங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. இதனை சரியாக கேட்காமலும், படிக்காமலும் அவரவர் கருத்து சொல்வது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.
இவ்வாறு கார்த்தி ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications