படத்துல நடிக்காம ஸ்டேஜ்ல நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.. போட்டுத்தாக்கும் கரு பழனியப்பன்
நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்காமல் பட ப்ரோமோஷன் ஸ்டேஜ்களில் கண்ணீர் விட்டு நடிப்பதாக இயக்குநர் கருப்பழனியப்பன் விளாசியுள்ளார்.
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்காமல் பட ப்ரோமோஷன் ஸ்டேஜ்களில் கண்ணீர் விட்டு நடிப்பதாக இயக்குநர் கருப்பழனியப்பன் விளாசியுள்ளார். அதேநேரத்தில் நடிகர் விஜய்சேதுபதி சிவாஜியைப் போல் எல்லா ரோல்களிலும் கலக்குவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
பட்டதை பட்டெனப் பேசும் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் என தமிழர் உரிமை போராட்டங்களில் தொடர்ந்து குரல் கொடுத்த வருகிறார். மக்கள் விரோதப் போக்குடன் செயல்படும் அரசையும் விமர்சித்த கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் நடிகர் சிவகார்த்தியனை சரமாரியாக விளாசினார்.

விஜய் சேதுபதிக்கு புகழாரம்
தற்போது தமிழகத்தில் மக்கள் விரும்பும் நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி என்றார். விஜய்சேதுபதி 67களில் சிவாஜிகணேசனை போல் அனைத்து கதாப்பாத்திரங்களிலும் தயக்கமின்றி சிறப்பாக நடிப்பதாக கூறினார்.

சிவகார்த்திகேயனை விளாசிய கரு.
மக்கள் விரும்புவதுபோல் விதவிதமான கதாப்பாத்திரங்களில் நடிப்பதால் அவர் படங்கள் ஹிட் ஆவதாக கூறிய கரு.பழனியப்பன், நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் ஒரே கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறினார்.

ஸ்டேஜ்களில் கண்ணீர் விடும் சிவகார்த்திகேயன்
மேலும் படத்தில் நடிக்காமல் பட ப்ரோமோஷன்களின் போது ஸ்டேஜ்ஜில் கண்ணீர் விட்டு நடிப்பதாகவும் அவர் கூறினார். புரொடியுசரிடம் பணமில்லை, கார் இல்லை எனக் கண்ணீருடன் கூறி மக்களை தியேட்டருக்கு வரவழைப்பதாகவும் கூறினார்.
|
சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் விஜய்சேதுபதி கண்ணீரும் விடுவதில்லை ப்ரோமோஷனுக்கும் வருவதில்லை. சிரித்துக்கொண்டே அடுத்த வேலையை தொடங்கி விடுகிறார் என்றார். கரு.பழனியப்பனின் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications