கருணாநிதி அதே தொகுதியில் போட்டியிடலாம்.. ஜெ., விஜயகாந்த் தொகுதி மாறலாம்!
சென்னை: சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் கசிந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் அதன் தலைவர் கருணாநிதி, அதிமுக சார்பில் ஜெயலலிதா, தேமுதிக சார்பில் விஜயகாந்த், பாமக சார்பில் அதன் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அந்த 4 பேரும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளனர் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்சபை தேர்தலில் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா
அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தனக்கு ராசியான எண் 11 கொண்ட திருவையாறு தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது. திருவையாறு தொகுதியின் எண் 173. அதை கூட்டினால் 11 வரும். இதற்கிடையே உடல் நிலையை கருத்தில் கொண்டு சென்னையிலேயே ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தகுதியில் போட்டியிடக்கூடுமாம். முன்னதாக அவர் கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருத்தாச்சலத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications