திருவாரூரில் கருணாநிதி அபார வெற்றி.. வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வென்று சாதனை!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வத்தை அவர் 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வீழ்த்தினார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திருவாரூரில் போட்டியிட்டார் திமுக தலைவர் கருணாநிதி. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திருவாரூரில் கருணாநிதி 121196 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இத்தொகுதியில் அவர் இரண்டாவது முறை போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார் கருணாநிதி. அதிலும் இம்முறை அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார் கருணாநிதி. பன்னீர் செல்வத்தை விட 67212 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் கருணாநிதி.
இதுவரை அவர் பெற்ற மிகப் பெரிய வாக்கு வித்தியாசம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அகில இந்திய அளவில் சட்டசபைக்கு 13வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையும் கருணாநிதிக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து 13 முறை சட்டசபைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை களமிறங்கிய எந்தத் தேர்தலில் கருணாநிதி தோல்வியைத் தழுவவில்லை.
கடந்த முறை திருவாரூரில் அவர் அவர் பெற்ற வாக்குகளை விட இம்முறை கூடுதலாக 18,117 வாக்குகள் பெற்றுள்ளார்.
கருணாநிதியின் வெற்றியை திருவாரூரில் உள்ள திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications