திருவாரூரில் மீண்டும் போட்டியா? கூட்டணி அமைவது சாத்தியமா? கருணாநிதி விளக்கம்
சென்னை: திமுக அனுமதித்தால் திருவாரூரில் மீண்டும் போட்டியிடுவேன் என்றும் சட்டசபை தேர்தலில் கூட்டணி என்பது வரவேற்கத் தகுந்த ஒன்று என்றும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூரில் இன்று செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
கேள்வி : கரு அறைக்குள் முதலமைச்சர் படத்தை வைத்து பூஜை செய்திருக்கிறார்களே; அதைப்பற்றி?
பதில்: தமிழ்நாட்டில் மூட நம்பிக்கைக்கு ஒரு அளவு இல்லை என்பதற்கு இது ஒரு அடையாளம்.
கேள்வி: வரக் கூடிய சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைவது சாத்தியமா?
பதில்: கூட்டணி வெறுக்கத் தக்க ஒன்று அல்ல. கூட்டணி வரவேற்கத் தகுந்த ஒன்று. கூட்டணிக்கு வர விரும்புகின்ற கட்சிகளை உதறித் தள்ள மாட்டோம். எந்தக் கட்சியானாலும் ஜனநாயகத்திற்கு வெற்றித் தேடித் தருமேயானால், அந்தக் கட்சிகளை தாராளமாக நாங்கள் வரவேற்போம்.
கேள்வி: 2016 ஆண்டு தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எதை மையப்படுத்தியிருக்கும்?
பதில் : ஜனநாயகத்தை மையப்படுத்தி இருக்கும்.
கேள்வி : தேர்தல் அறிக்கையில் மின் கட்டணக் குறைப்பு இருக்குமா?
பதில் : தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும் என்று இப்போது வெளியிடுவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகும். விரைவில் வெளியிடப்படவிருக்கின்ற தேர்தல் அறிக்கையில் அதைப் பற்றி விளக்கமாகச் சொல்லப்படும்.
கேள்வி: விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று மாணவிகள் இறந்தது பற்றி உங்கள் அறிக்கை வந்துள்ளது. நீதி விசாரணை வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். எந்த அளவுக்கு தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: தமிழக அரசைப் பொறுத்தவரையில் இதே போன்ற கொலைகள் தமிழகத்திலே நடைபெற்றிருந்தாலுங்கூட, அதைப்பற்றி கவலைப்பட்ட அரசு அல்ல.
கேள்வி: கடந்த நாலே முக்கால் ஆண்டுக் கால தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
பதில்- சொல்லக் கூடிய அளவுக்கு ஒன்றும் இல்லை.
கேள்வி: மீண்டும் நீங்கள் திருவாரூரில் போட்டியிடுவீர்களா?
பதில்: திருவாரூர் மக்கள் சொன்னால், கழகம் அனுமதித்தால், போட்டியிடுவேன்.
கேள்வி : சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?
பதில்: வெற்றி வாய்ப்பு நன்றாகத்தான் இருக்கிறது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications