நவ. 7- ஸ்டாலின் எழுச்சிப் பயணத் தொடக்க விழாவில் கருணாநிதி பங்கேற்பு?
ஸ்டாலின் எழுச்சிப் பயணத் தொடக்க விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 7-ந் தேதி தொடங்க இருக்கும் எழுச்சிப் பயணத்தின் தொடக்க விழாவிலும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி பங்கேற்பார் என கூறப்படுகிறது.
ஓராண்டாக உடல்நலக் குறைவால் பொதுநிகழ்ச்சிகளில் கருணாநிதி பங்கேற்காமல் இருந்தார். அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த வாரம் திடீரென முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி அழைத்து வரப்பட்டார். அங்கு 40 நிமிட நேரம் முரசொலி பவள விழா கண்காட்சி அரங்கு, முரசொலி மாறன் சிலை ஆகியவற்றை பார்த்தார்.
பின்னர் புன்னகை சிரிப்போடு கருணாநிதி, கோபாலபுரம் இல்லம் சென்றார். அப்போது அவரது மருத்துவர், ஓரிரு நாளில் மற்றொரு அதிசயம் நடைபெறும் எனவும் கூறியிருந்தார். இதனால் கருணாநிதி விரைவில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நவம்பர் 7-ந் தேதியன்று ஸ்டாலினின் எழுச்சிப் பயணத்தை மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியிலும் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது திமுக தொண்டர்களை மிகுந்த உற்சாகத்தில் திளைக்க வைத்துள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications