கருணாநிதி சட்டசபைக்கு வந்தார்.. கையெழுத்துப் போட்டார்.. இருக்கை வசதி இல்லாததால் கிளம்பிச் சென்றார்!
சென்னை: சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த திமுக தலைவர் கருணாநிதி, பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு புறப்பட்டார். சட்டசபையில் தனக்கு போதிய இருக்கை வசதி செய்து தராததால் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என அப்போது கருணாநிதி தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிர்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. மற்றும் முதல்வர் பதவியை அவர் இழந்தார். எனவே, தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் சட்டசபைக்கு வருகை தந்துள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த போது, ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியும் சட்டசபைக்கு வருகை புரிந்தார். அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி.
அப்போது, ‘முன்னதாக தான் கூறியது போல தனக்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டிய கருணாநிதி, மக்கள் பிரச்சினைகளைப் பேச இந்த மூன்று நாள் சட்டசபைக் கூட்டம் மட்டும் போதாது என அவர் தெரிவித்தார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications